Friday, December 7, 2012

எலும்பு முறிவு குணமடையவும் முற்பிறப்பு வினைகள் நீங்கவும் உதவும் பதிகம்

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
      பாடல்விளை யாடல் அரவம்
மங்குலொடுநீள் கொடிகண் மாடமலி
      நீடுபொழில் மாகறல் உளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
      திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள்
      தீ வினைகள் தீரும் உடனே

கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி
     ஆடல்கவின் எய்தி அழகார்
மலையின் நிகர் மாடம் உயர் நீள்கொடிகள்
     வீசுமலி மாகறல் உளான்
இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன்
     ஏந்தி எரிபுன் சடையினுள்
அலைகொல்புனல் ஏந்து பெருமான் அடியை
     ஏத்த வினை அகலுமிகவே

காலையோடு துந்துபிகள் சங்கு குழல்
     யாழ் முழவு காமருவு சீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
     ஏத்தி மகிழ் மாகறல் உளான்
தோலையுடை பேணியதன் மேலோர் சுடர்
     நாகமசையா அழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
     ஏத்தவினை பறையும் உடனே

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
     உந்திஎழில்மெய்  உள் உடனே
மங்கையரும் மைந்தர்களு மன்னுபுனலாடி
     மகிழ் மாகறல் உளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
     செஞ்சடையினான் அடியையே
நுங்கள் வினை தீரமிக வேத்தி
     வழிபாடு நுகரா எழுமினே

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
     தோன்றுமது வார்கழநிவாய்
மஞ்சுமலை பூம்பொழிலின் மயில்கள்நட
     மாடமலி மாகறல் உளான்
வஞ்சமத யானை உரி போர்த்துமகிழ்
     வானோர் மழுவாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடியாரை
     நலியா வினைகளே

மன்னுமறை யோர்களோடு பல்படிம
     மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகையால் இனி திறைஞ்சி
     இமையோரில் ஏழு மாகறல் உளான்
மின்னனை விரி புன்சடையின் மேல் மலர்கள்
     கங்கையோடு திங்கள் எனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்க உயர்
     வானுலகம் ஏறல் எளிதே

வெய்யவினை நெறிகள் செல வந்தணையு
     மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரிகானல்மது வார்கழனி
      மாகறல் உளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
     தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சி
     அடையாவினைகள் அகலுமிகவே

தூசுதுகில் நீள் கொடிகள் மேகமொடு
     தோய்வன பொன் மாடமிசையே
மாசுபடு செய்கை மிக மாதவர்கள்
     ஓதி மலி மாகறல் உளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
     கச்சையுடை பேணிஅழகார்பூசு
பொடிஈசன் என ஏத்தவினை
     நிற்றல் இல போகும் உடனே

தூய விரி தாமரைகள் நெய்தல்
     கழுநீர் குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
     ஓசை பயில் மாகறல் உளான்
சாயவிரல் ஊன்றிய இராவணன்
     தன்மைகெட நின்ற பெருமான்
ஆய புகழ் ஏத்தும் அடியார்கள்வினை
     யாயினவும் அகல்வதெளிதே

காலினல பைங்கழல்கள் நீள் முடியின்
     மேலுணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரியாகி
     உயர் மாகறல் உளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
     நாகமொடு கூடியுடனாய்
ஆலும் விடை யூர்தியுடை அடிகள் அடி
     யாரை அடையாவினைகளே

கடைகொள் நெடுமாடமிக ஓங்குகமழ்
     வீதிமலி காழியவர்கோன்
அடையும் வகையால் பரவி அரனையடி
     கூடுசம் பந்தனுரையால்
மடைகொள் புன லோடுவயல் கூடுபொழில்
     மாகறல் உளான் அடியையே
உடைய தமிழ் பத்தும் உணர் வாரவர்கள்
     தொல்வினைகள் ஒல்கும் உடனே

திருச்சிற்றம்பலம்

Thursday, November 22, 2012

மனக் கவலைகள் ஒழியவும் பிறவா நிலை எய்தவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே


நெக்குள்ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவர்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே


இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே


கொள்வார் ஏனும் குணம் பல நன்மைகள்
இல்லார் ஏனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே


மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய
பந்தனை யாவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே


நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெயவாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே


இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தவங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே


போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான் முடி நெடிய பண்பராய்
யாதும் காண் பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே


காஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே


நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞான சம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே

திருச்சிற்றம்பலம்











Friday, June 29, 2012

நல்ல ஒலி அலைகள் பரவி மங்களம் பெருகவும் திருமணம், மணிவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாழ்த்தவும் பயன்படுத்த வேண்டிய "மங்களப் பதிகம்"


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே

தொண்டணை செய்தொழில் துயர் அறுத்துய்யலாம்
வண்டனைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண் துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணையாக ஓர் பெருந்தகை இருந்ததே

அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சகமே
விடைஅமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடைஉயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே

மற்றொரு பற்றிலை நெஞ்சகமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 
சிற்றிடைப் பேரல் குல்திருந்திழை யவளொடும்
பெற்றென்னை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே

அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
சுருக்குவாள் அருள் செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்கு நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே

நெடியவன் பிரமனும் நினைப் அரிதாய் அவர்
அடியோடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே

தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொர்களைந் தடியினை அடைந்துயமின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் பொய் விண்ணுல காள்வரே

திருச்சிற்றம்பலம்














Saturday, June 23, 2012

சிவபுண்ணியம் பெறவும், தீவினைகள் நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்


துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்துநினைமின் நாள்தோறும்
வஞ்சகம் அற்று அடிவாழ்ந்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே

மந்திர நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே

ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்
தேனை வழி திறந்து ஏதுவர்க்கு இடர்
ஆனா கெடுப்பன அஞ்செழுத்துமே

நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே

கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து
அங்குள பூதம் அஞ்ச ஐம்பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே


வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன மண்ணு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே

வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே


கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்
சீர்வணச் சேவடி செவ்வினாள் தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவண அஞ்செழுத்துமே

புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
சித்தாத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே

நற்றமிழ் ஞான சம்பந்தன் நான் மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே

திருச்சிற்றம்பலம்










Friday, June 1, 2012

பொருள் தரும் பதிகம்


இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தொழுவேன்
கடல்தனில் அமுதோடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே


வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே


வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அறத்றது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே


பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏறுடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே


உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே


பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமகில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே


அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே

திருச்சிற்றம்பலம்

Thursday, May 31, 2012

கோளறு பதிகம் - நவ கிரகங்களால் வரும் தோஷங்கள் நீங்கச் செய்யும் பதிகம்


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு கங்கை கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

என்போடு கொம்போ டாமை இவைமார் பிலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றோடு ஏழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்போடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே


உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் களைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
காதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடு நோய்கள் ஆனா பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

வாள்வரி அதல தாடை வரிகோவணத்தார்
மடவாள் தனோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

செப்பில முலைநன் மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து 
மடவாள் தனோடும் உடனாய் 
வாண்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் 
உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரயன் றனோடும்
இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே

பலபல வேடமாகும் பரன் நாரி பாகன் 
பசுவேறும் எங்கள் பரமன் 
சலமாளோடெருக்கு முடிமேல் அணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் 
வருகால மான பலவும் 
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே

கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு 
குணமாய வேடவிகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் 
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் 
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

தேனமர் பொழில்கொள் ஆளை விளை செந்நெல் துன்னி 
வளர்செம்பொன் எங்கும் நிகழ 
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் 
அரசாள்வர் ஆணை நமதே 

திருச்சிற்றம்பலம் 


Wednesday, May 30, 2012

முன் வினையால் வரும் நோய்கள் நீங்கவும், பில்லி சூனியம் ஏவல் முதலியன நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்


காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக்கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டபெறா திருநீலகண்டம்


முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைதெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்

விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீ வினை தீண்டபெறா திருநீலகண்டம்


மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்றெமைத் தீ வினை தீண்ட பெறா திருநீலகண்டம்


மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்


கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
உருகிமலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்ந்து அருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டபெறா திருநீலகண்டம்


நாற்றமலர்மிசை நான் முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டபெறா திருநீலகண்டம்


சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழித்தும்
பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வன் கழல் அடைவான் 
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண் 
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார் 
நிறைந்த உலகினில் வானவர் கோ னொடும் கூடுவரே 

திருச்சிற்றம்பலம்