Friday, June 29, 2012

நல்ல ஒலி அலைகள் பரவி மங்களம் பெருகவும் திருமணம், மணிவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் வாழ்த்தவும் பயன்படுத்த வேண்டிய "மங்களப் பதிகம்"


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் 
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே

தொண்டணை செய்தொழில் துயர் அறுத்துய்யலாம்
வண்டனைக் கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண் துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணையாக ஓர் பெருந்தகை இருந்ததே

அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப் பெருந்தகை இருந்ததே

அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சகமே
விடைஅமர் கொடியினான் விண்ணவர் தொழுதெழும்
கடைஉயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே

மற்றொரு பற்றிலை நெஞ்சகமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச் 
சிற்றிடைப் பேரல் குல்திருந்திழை யவளொடும்
பெற்றென்னை ஆளுடைப் பெருந்தகை இருந்ததே

அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
சுருக்குவாள் அருள் செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்கு நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே

நெடியவன் பிரமனும் நினைப் அரிதாய் அவர்
அடியோடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே

தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொர்களைந் தடியினை அடைந்துயமின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை இருந்ததே

கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம்பிரான் தனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார் அவர்கள் பொய் விண்ணுல காள்வரே

திருச்சிற்றம்பலம்