Tuesday, April 6, 2010

பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே

கைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரைஏருஞ் சிராப்பள்ளி
வேம்முகவேழ்ந்து ஈருரி போர்த்த விகிர்தாநீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே

மந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்
செந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி
சந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே

துறை மல்கு சாரற் சுனை மல்கு நிலத்திடை வைகிச்
சிறை மல்கு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்
பிறை மல்கு சென்னி யுடையவன் எங்கள் பெருமானே

கொலை வரையாத கொள்கையர் தங்கம் மதில் மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமையுரைப் பீர்காள்
நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே

வெய்யதண் சாரல் விரிநிற வேங்கைத் தண்போது
செய்ய போன் சேருஞ் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையலோர் பாகம் மகிழ்வார் நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே

வேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிர் றாகாதே

மலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன் தன்
தலைகலனாகப் பலி திரிந்துண்பர் பழியோரார்
சொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால்
சிலவல போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்சடை செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே

நானாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்
பேணாது உறுசீர் பெருதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே

தேனயம் பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த
கானல் சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்
வான சம்பந்தத் தவரோடு மன்னி வாழ்வரே

திருச்சிற்றம்பலம்

வழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியாபாரம் - இவற்றில் வருவாய் பெருக்கவும் படிக்க வேண்டிய பதிகம்

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கரைகொள் காசினை முறைமை நல்குமே

செய்ய மேனியீர் மறைகொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே

நீருபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே

காமன்வேவஓர் தூமக் கண்ணிணீர்
நாமம் மிழலையீர் சேமம் நல்குமே

பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடரினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே

அரக்கன் நெரிதர இறக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே

பறிகொள் தலையினார் அறிவுதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவதரியதே

காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழைமேல் தாழும் மொழிகளே

திருச்சிற்றம்பலம்















Sunday, April 4, 2010

துன்பங்களை நீக்கி இன்பம் தந்தருளும் பதிகம்..

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனை பேசினல்லால்
குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கனைத்தெழுந்த வேண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடற் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

மலை புரிந்த மன்னவன்றன் மகளையோர் பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை யாரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினோடுந் தலைவநின் தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடைமேர் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கனையால்
மாறுகொண்டார் புரமெறித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதேன்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக்கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்று நைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் நேட ஆங்கோர் சோதியுளாகி நின்றாய்
கேழல் வெண்கொம் பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமனும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே

திருச்சிற்றம்பலம்













சனி பகவானால் வரும் தோஷங்கள் நீங்க பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்



போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே

தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோடு ஏழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே

ஆன்முறையா லாற்ற வெண்ணீறாடி அணியிழையோர்
பான் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான் மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே

புல்கவல்ல வார்சடை மேற்பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றை மாலை மதியோடுடன் சூடிப்
பல்கவல்ல தொண்டர் தம் பொற்பாத நிழர்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே

ஏறுதாங்கி யூர்திபேணியேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடரவஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே

திங்களுச்சி மேல்விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி எம்மிறைவன் என்றடியே இறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடியார் கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே

வெஞ்சுடர்த்தீ அங்கைஏந்தி விண் கொண்முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல் பாடல் பேனுவதன்றியும் போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடிதிகழ்த்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுவதன் றியும் போய்ப்
பட்ட மார்ந்த சென்னிமேலோர் பால்மதியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே

உண்ணாலாகா நஞ்சு கண்டதுண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ண நீழல் ஆரழல் பேலுருவம்
எண்ணலாகாவுள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே

மாசு மெய்யர் மண்டைதேரர் குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன் மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே

தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நல்லாரேத்து பாடல் பத்தும் இறைவல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகிலுறைவரே

திருச்சிற்றம்பலம்



























நரம்புத் தளர்ச்சி, வாத நோய், வலிப்பு முதலிய நோய்கள் நீக்கும் பதிகம்


துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ்சூழ
வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோலமெலாஞ் செய்து பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல் செய்வதோ இவர் மாண்பே

கலைபுனை மானுரி தோலுடையாடை
கனல் சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தாரணி மார்பார்
தம் அடிகள் இவரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட
இடர் செய்வதோ இவரீடே

வெஞ்சுடராடுவர் துஞ்சிருள் மாலை
வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிடமாக
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்
சிதை செய்வதோ இவர் சீரே

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்
கனல் தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை அணிந்தழகாய
புநிதர் கொலாம் இவர் என்ன
வனமலி வண்பொழில் சூழ்தருபாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையைவாட
மயல் செய்வதோ இவர் மாண்பே

மாந்தர் தம்பால் நறுநெய் மகிழ்ந்தாடி
வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை
முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தார் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச்சதுர்
செய்வதோ இவர் சார்வே

நீறுமெய்பூசி நிறைசடை தாழ
நெற்றிக் கண்ணாலுற்று நோக்கி
ஆறதுசூடி ஆடவராட்டி
ஐவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட
இடர் செய்வதோ இவரீடே

பொங்கிள நாகம் ஓர் ஏகவடத்தோடு ஆமை
வெண்ணூல் புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய
குழகர் கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்
சதிர் செய்வதோ இவர் சார்வே

ஏவலத்தால் விசயர்கருள் செய்து
இராவணனை ஈடழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய்
மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் மொழிற் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்
சிதை செய்வதோ இவர் சேர்வே

மேலது நான்முகன் எய்தியதில்லை
கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியதில்லை
என இவர் நின்றது மல்லால்
ஆலதுமாமதி தோய் பொழிற் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்
பழிசெய்வதோ இவர் பண்பே

நாணொடு கூடிய சாயினரேனும்
நகுவரவர் இருபோதும்
ஊணொடு கூடியவுட்கு நகையாலுரை
களவை கொள வேண்டா
ஆணோடு பெண் வடிவாயினர் பாச்சி
லாச் சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ பூங்கொடி வாடப்
புனை செய்வதோ இவர் பொற்பே

அகமலி அன்போடு தொண்டர் வணங்க
ஆச்சிராமத் துறைகின்ற
புகைமலி மாலை புனைந்தழகாய
புனிதர் கொலாம் இவரென்ன
நகை மலி தண்பொழில் சூழ்தரு
காழிநற்றமிழ் ஞான சம்பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை ஏத்த
சாரகிலா வினை தானே

திருச்சிற்றம்பலம்