மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கரைகொள் காசினை முறைமை நல்குமே
செய்ய மேனியீர் மறைகொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே
நீருபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே
காமன்வேவஓர் தூமக் கண்ணிணீர்
நாமம் மிழலையீர் சேமம் நல்குமே
பிணிகொள் சடையினீர் மணிகொள் மிடரினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர இறக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே
பறிகொள் தலையினார் அறிவுதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிரிவதரியதே
காழிமாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழைமேல் தாழும் மொழிகளே
திருச்சிற்றம்பலம்