Sunday, April 4, 2010

பதிகங்கள் முன்னுரை


பதிகங்கள் நால்வரால் இயற்றப்பட்டது.யார் அந்த நால்வர்? அவர்கள் - அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர், 
த்தொகுப்பில் உள்ள பாடல்களை குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக பக்தியோடு காலையும் மாலையும் என்று
48 நாட்கள் பாராயணம் செய்ய இறை அருளால் துன்பங்கள் தீரும். 
வேண்டியவை வேண்டியபடி நடக்கும் என்பது கண்கூடு 

விநாயகர் மற்றும் நால்வர் துதி படித்த பின்பே ஒவ்வொரு பதிகமும் பாராயணம் செய்யப்பட வேண்டும்.

I am storing it all for the use of everybody who has trust in Lord Shiva’s grace. This is not for any other being, who has even the slightest doubt about the existence of God. I have personally experienced that these are very powerful in giving the best desired results for people who sing or read it with unshakable faith in Almighty. 

விநாயகர் துதி
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவர் தங் கை.

நால்வர் துதி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி.